ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் பெண் அமைச்சர்கள் கூட்டத்தில் மகளிரின் ஊரகத் தொழில் முனைவு குறித்த கண்காட்சிக்கு ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 08 JUL 2026 5:31PM by PIB Chennai

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், கேரள மாநிலம் கொச்சியில், 2026 ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் பெண் அமைச்சர்கள் கூட்டத்திற்கு இடையே நடைபெறவுள்ள கண்காட்சியில் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பங்கேற்றுள்ளது. நாடு முழுவதும் மகளிரால் நடத்தப்படும் ஊரக தொழில்துறை முயற்சிகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது.

இக்கண்காட்சியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, இணையமைச்சர் திரு சாவித்ரி தாக்கூர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மகளிரால் நடத்தப்படும் சுயஉதவிக் குழுக்களின் தொழில் முனைவு குறித்து அமைச்சர்களுக்கு விளக்கப்பட்டது. பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து. எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் அமைச்சர்களும், உயர் பிரதிநிதிகளும் அரங்குகளைப் பார்வையிட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஊரக தொழில்துறை குறித்து உரையாடினார்கள்.

இந்தக் கண்காட்சியில் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282503&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2282547) வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam