ஜவுளித்துறை அமைச்சகம்
கைத்தறித்துறையில் புதுமை கண்டுபிடிப்புகளுக்காக கைத்தறி ஹேக்கத்தான் 2026 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
08 JUL 2026 11:07AM by PIB Chennai
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள கைத்தறி மேம்பாட்டு ஆணையர் அலுவலகம், கைத்தறி ஹேக்கத்தான் 2026 – நெசவுத்துறையில் புதுமை கண்டுபிடிப்பு என்ற தேசிய அளவிலான புதுமை கண்டுபிடிப்புப் போட்டியைத் தொடங்கியுள்ளது. நாட்டின் கைத்தறித் துறையை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்பம், வடிவமைப்பு, தொழில்முனைவு, நீடித்த தீர்வுகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சி தேசிய கைத்தறித் தினம் 2026 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக உள்ளது.
இப்போட்டியின் இறுதிச் சுற்று புதுதில்லி ஐஐடி-ல் உள்ள புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான அறக்கட்டளை வளாகத்தில் 2026 ஆகஸ்ட் 1-ல் நடைபெறவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் குழுவினர், கல்வித்துறை, தொழில்துறை, வடிவமைப்பு, தொழில்நுட்பம், கைத்தறித்துறையைச் சார்ந்த நிபுணர்களின் மதிப்பீட்டுக் குழுவிடம் தீர்வுகளை சமர்ப்பிப்பார்கள்.
இந்த முன்முயற்சிக் குறித்து பேசிய கைத்தறித்துறை மேம்பாட்டு ஆணையர் டாக்டர் எம் பீனா, கைத்தறி ஹேக்கத்தான் 2026 இந்திய இளைஞர்களின் படைப்பாற்றலையும் கைத்தறித் துறையின் வளமையான பாரம்பரியத்தையும் ஒருங்கிணைப்பதாக தெரிவித்தார். நெசவாளர்கள், மாணவர்கள், வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், தொழில்முனைவோர், புதுமைக்கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோருக்கான ஒருங்கிணைந்த தளத்தை அளிப்பதன் மூலம் இந்தத் துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்குத் தீர்வு காணவும், போட்டித் தன்மையை அதிகரிக்கவும் கைத்தறித்துறையில் நீடித்த வளர்ச்சிக்கு பங்களிக்கவும் ஏற்ற தீர்வுகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282338®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2282493)
आगंतुक पटल : 7