வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்டிலிருந்து ஆம்ரபாலி மாம்பழங்கள் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 07 JUL 2026 2:12PM by PIB Chennai

மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி முகமை (அபெடா), ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லா, தியோகர் ஆகிய மாவட்டங்களிலிருந்து இரண்டு மெட்ரிக் டன் ஆம்ரபாலி மாம்பழங்களைத் துபாய்க்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜூலை 3 அன்று அனுப்பப்பட்ட இந்த மாம்பழங்கள், துபாயில் உள்ள பிரபல லூலு அங்காடிகள் மூலம் சில்லறை விற்பனை செய்யப்படவுள்ளன.

பழங்குடியினப் பெண் விவசாயிகள் நடத்திவரும் மூன்று விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளிடமிருந்து இந்த உயர்தர மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.  இந்த ஏற்றுமதித் திட்டத்தின் மூலம் உள்ளூர் சந்தை விலையை விட சுமார் 180 சதவீதம் வரை கூடுதல் வருவாய் பெண் விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளது. கிராமப்புற உற்பத்தியாளர்களைச் சர்வதேசச் சந்தைகளுடன் இணைக்கும் இந்த முயற்சி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதோடு ஏற்றுமதி சார்ந்த வேளாண்மையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281950&reg=3&lang=1

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2282177) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Telugu