வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கம் - வர்த்தகம், பொருளாரத்திற்கான ஒப்பந்தத்தின் கீழ், கடல் உணவுத் துறைக்கான வாய்ப்புகள் குறித்த கருத்துப் பரிமாற்றக் கூட்டத்திற்கு வர்த்தகத் துறை ஏற்பாடு

प्रविष्टि तिथि: 06 JUL 2026 6:47PM by PIB Chennai

மத்திய வர்த்தகத் துறை, இந்திய-ஐரோப்பிய தடையற்ற  வர்த்தக சங்கம் இடையேயான வர்த்தகம், பொருளாதாரக் ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தின் கீழ், கடல் உணவுத் துறைக்கான வாய்ப்புகள்" குறித்த கருத்து பரிமாற்ற ஆலோசனைக் கூட்டத்தை, 2026 ஜூலை 3 அன்று சென்னையில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந்திய கடல்சார் உணவுகளின் கண்காட்சி, 2026-ன் ஒரு பகுதியாக, இந்த உயர்நிலை  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் உள்ள உறுப்பு நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் முதல் வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள உறுப்பு  நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1.79 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மேலும், சரக்கும்  சேவை தொடர்பான வர்த்தகத்தில், இவை உலகின் முன்னணி நாடுகளாகத் திகழ்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இந்தியா ஏற்கனவே கொண்டுள்ள வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் அதே வேளையில், ஐரோப்பியப் பொருளாதாரக் கூட்டமைப்புடன், இந்தியா மேற்கொள்ளும் முதல் செயல்பாட்டு வர்த்தக ஒப்பந்தமாகவும் இது அமைகிறது. இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பத்து லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொழில்நுட்பப் பரிமாற்றம், கூட்டு முயற்சிகள், உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சிறப்புத் தொழில்நுட்ப நிறுவனங்களுடன்  ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. அதே சமயம், மீனவர்கள், கடல் உணவுத் துறை சார்ந்தவர்களுக்கான, குறிப்பாகத் தமிழ்நாடு போன்ற கடலோர மாநிலங்களில் உள்ளவர்களுக்கான, ஏற்றுமதி வாய்ப்புகளையும் இது கணிசமான அளவில்  விரிவுபடுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2281783&reg=3&lang=1

(Release ID:2281783)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2281830) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी