PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாஹேண்ட்மேட்: இந்தியாவின் கைவினைத்தொழில்கள் மேம்பாட்டிற்கான டிஜிட்டல் தளம்

प्रविष्टि तिथि: 06 JUL 2026 2:13PM by PIB Chennai

இந்தியாவின் பாரம்பரிய கைத்தறிகைவினைப் பொருட்களை இணையவழிப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கும் நோக்கில் 'இந்தியாஹேண்ட்மேட்எனும் பிரத்யேக டிஜிட்டல் சந்தை தளம் செயல்பட்டு வருகிறதுநுகர்வோருடன் கைவினைக்கலைஞர்களையும் நெசவாளர்களையும் நேரடியாக இணைக்கும் இந்த தளம்இடைத்தரகர்கள் இல்லாத சூழலை உருவாக்கி அவர்களுக்கு நியாயமான வருவாயை உறுதி செய்கிறதுகிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாடுகலாச்சாரப் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்திச் செயல்படும் இந்த இணையதளத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் வரும் பிராந்திய கைவினைப் பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இந்தியப் பாரம்பரிய கைவினைத் துறையில் சுமார் 64.66 லட்சம் கைவினைக்கலைஞர்களும் நெசவாளர்களும் ஈடுபட்டு வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்குறிப்பாகஇத்துறையில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளதுகைத்தறி நெசவாளர்களில் 71 சதவீதத்தினரும் மொத்த கைவினைக்கலைஞர்களில் 64 சதவீதத்தினரும் பெண்கள் ஆவர்இத்தகைய சூழலில்டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பாரம்பரியத் தொழில்களை இணையவழி வர்த்தகத்துடன் இணைப்பது கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மகளிர் மேம்பாட்டிற்கும் அடித்தளமாக அமைகிறதுமத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் அமைப்பால் 2023-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த தளம்இந்தியக் கைவினைக்கலைஞர்களின் தயாரிப்புகளுக்கு நாடு தழுவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்த இணைய தளம் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே நம்பகமான வணிகச் சூழலை உருவாக்குகிறதுநெசவாளர்கள் தங்களின் தயாரிப்புகளுக்கு எவ்வித கூடுதல் தொகையும் செலுத்தத் தேவையில்லை என்பதோடுநுகர்வோருக்கு இலவச விநியோக வசதிபாதுகாப்பான பணப் பரிவர்த்தனை முறைகள்பொருட்களை எளிதா திருப்பி அனுப்பும் வசதி ஆகியவை வழங்கப்படுகின்றனஇதனால் வாடிக்கையாளர்கள் போட்டி விலையில் தரமான பொருட்களைப் பெற முடிகிறதுமேலும்சிறு கைவினைக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி பதிவு இல்லாத விற்பனையாளர்களும் தங்களின் மாநிலத்திற்குள் மட்டும் வர்த்தகம் செய்யும் வகையில் சேர்க்கை அடையாள எண் மூலம் இதில் எளிதாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

இத்தளத்தில் ஆடைகள்வீட்டு அலங்காரப் பொருட்கள்ஓவியங்கள்மரச்சாமான்கள்இசைக்கருவிகள்ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் கிடைக்கின்றனஇவற்றுடன் பஷ்மினா சால்வைகள்டோக்ரா கலைப் பொருட்கள் போன்ற புவிசார் குறியீடு பெற்ற தனித்துவமான தயாரிப்புகளும், டங்கைல் புடவைகள்பனாரஸ் பட்டுசந்தேரி பட்டுசுடுமண் சிற்பங்கள் போன்ற ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டப் பொருட்களும் பிராந்திய அடையாளங்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன. சந்தம்ஸ், தஸ்த்கார் கிராஃப்ட்வில்லேஜஸ் கிராஃப்ட் போன்ற உள்நாட்டு நிறுவனங்களின் கீழ் நூற்றுக்கணக்கான கைவினைக்கலைஞர்கள் தயாரிக்கும் பொருட்கள் இந்த டிஜிட்டல் சந்தை மூலம் விற்கப்படுகின்றன.

தற்சார்பு இந்தியா இலக்கை எட்டும் நோக்கில் 60 லட்சத்திற்கும் அதிகமான கைவினைக்கலைஞர்களை இந்த தளத்தில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதுடிஜிட்டல் இந்தியா கொள்கையின்படிகைவினைத் தொழிலை வெறும் வாழ்வாதாரமாக மட்டும் பார்க்காமல் நாட்டின் கலாச்சார அடையாளமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் உன்னதப் பணியை இந்தியாஹேண்ட்மேட் தளம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: http://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281569&reg=3&lang=1

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2281794) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati