தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விழிப்புணர்வு, முன்முயற்சி தலையீடுகள், குறைதீர்ப்பு முன்முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் வலுப்படுத்தப்படும் தொழிலாளர் நலன்கள்

प्रविष्टि तिथि: 06 JUL 2026 3:50PM by PIB Chennai

தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தீவிரமான குறைதீர்ப்பு நடைமுறைகள், உரிய நேரத்தில் சமரச முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் தொழிலாளர் நலன்களையும், தொழில்துறை நல்லிணக்கத்தையும் நாடு முழுவதும் ஏற்படுத்த மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தலைமைத் தொழிலாளர் நல ஆணையர் (மத்தி) அமைப்பு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜபல்பூர், புவனேஸ்வர், ராய்ப்பூர், கான்பூர் ஆகிய இடங்களில் தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன.

ஜபல்பூரில் நடைபெற்ற சமூகப் பாதுகாப்பு தொடர்பான சட்டத் தொகுப்பு 2020 குறித்த விழிப்புணர்வு நிகழ்வில், நிர்வாகப் பிரதிநிதிகள், மனிதவளம் சார்ந்த தொழில்முறையாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு அவர்களின் உரிமைகள், கடமைகள் பற்றி உணர்த்தப்பட்டது. குறிப்பாக, பணியிடங்களில் பெண்களுக்கான உரிமைகள் எடுத்துரைக்கப்பட்டன.

புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்வில் நீண்டகாலம் நிலுவையில் இருந்த இந்திய எரிவாயு ஆணைய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான குறைகளுக்கு தீர்வுகாணப்பட்டு 81 தொழிலாளர்களுக்கு ரூ.51.27 லட்சம் வழங்க வகை செய்யப்பட்டது. ராய்ப்பூர், கான்பூர் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281652&reg=3&lang=1

***

SS/SMB/LDN/SH


(रिलीज़ आईडी: 2281792) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR