தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஹரியானா மாநில மருத்துவமனைகளில், சிகிச்சைக்கான போதிய வசதியின்றி பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
प्रविष्टि तिथि:
06 JUL 2026 1:34PM by PIB Chennai
ஹரியானாவின் ஹிசார், ரோஹ்தக் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில், 24 மணிநேரம் வரை செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) கிடைக்காத காரணத்தால். பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
ஹிசார், ரோஹ்தக் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில், குழந்தைக்குத் தேவையான செயற்கை சுவாசக் கருவியைப் பெற, குழந்தையின் தந்தையால் இயலவில்லை என்றும், அதன் விளைவாகக் குழந்தை உயிரிழந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தகைய செய்தி அறிக்கைகளில் உள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவை மனித உரிமை மீறல் தொடர்பான தீவிரமான சிக்கல்களை எழுப்புகின்றன என்று ஆணையம் கருதுகிறது. எனவே, இது குறித்து இரண்டு வார காலத்திற்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அம்மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281546®=3&lang=1
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2281776)
आगंतुक पटल : 10