சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
ராஜஸ்தான் மாநில மவுண்ட் அபுவில், மத்திய சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த 'சீர்திருத்தத் திருவிழா, சிந்தனை முகாம் நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
06 JUL 2026 1:04PM by PIB Chennai
மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சட்டத் துறை, சட்ட விவகாரத் துறை ஆகியவை இணைந்து, ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில், 'ஞான சரோவர்' வளாகத்தில், 2026 ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில், இரண்டு நாள் 'சீர்திருத்தத் திருவிழா, சிந்தனை முகாம் 2026' நிகழ்ச்சியை நடத்தின.
மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால், 2026 ஜூலை 4 அன்று, இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். நவீன, தொழில்நுட்பம் சார்ந்த, மக்களை மையமாகக் கொண்ட சட்டச் சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட சட்டம், சட்டப்பேரவை, நிறுவன ரீதியான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளில் இந்த நிகழ்ச்சி கவனம் செலுத்தியது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக சட்டத்துறை பணியாளர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். அண்மையில், அதன் சாதனைகளை மதிப்பாய்வு செய்யவும், முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், இந்தியாவின் சட்டம், சட்டப்பேரவைக் கட்டமைப்ப்புக்களை வலுப்படுத்துவதற்கான தொலைநோக்குச் செயல் திட்டத்தை வகுக்கவும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சட்டத் துறை, சட்ட விவகாரத் துறையின் செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி, சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தேசிய அளவிலான தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், திறமையான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற சட்டச் சூழலை உருவாக்குவது குறித்த அமைச்சகத்தின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார்
சட்டத் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர் மனோஜ் குமார், கருப்பொருள், நோக்கம், எதிர்பார்க்கப்படும் விளைவுகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். சட்ட நிர்வாகம், சட்டப்பேரவைச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம், நிறுவனங்களை வலுப்படுத்துதல், திறன் மேம்பாடு ஆகியவை குறித்துக் குழு விவாதங்கள், தீவிர கருத்துப் பரிமாற்றங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: http://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281526®=3&lang=1
***
SS/SV/RJ
(रिलीज़ आईडी: 2281697)
आगंतुक पटल : 15