பிரதமர் அலுவலகம்
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்
प्रविष्टि तिथि:
06 JUL 2026 12:21PM by PIB Chennai
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் ஒற்றுமை, கண்ணியம், முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த தலைசிறந்த தேசக் கட்டமைப்பாளர், மிகச்சிறந்த கல்வியாளர், தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவர் என அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
கல்வி, தொழில்துறை மேம்பாடு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு டாக்டர் முகர்ஜியின் நீடித்தப் பங்களிப்பு, பல தலைமுறைகளுக்கு தொடர்ச்சியான ஊக்கத்தை அளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார். “வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், டாக்டர் முகர்ஜியின் தொலைநோக்குப் பார்வையும், சிந்தனைகளும் நாட்டிற்கு வழிகாட்டும் சக்தியாக இருக்கும்” என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
கல்விப் புலமை, துணிவு, தேச சேவைக்கு அயராத உறுதிப்பாடு ஆகியவற்றால் அடையாளம் காணப்பட்ட வாழ்க்கையைக் கொண்ட இந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க தேச கட்டமைப்பாளர்களில் ஒருவரான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்த நாளான இன்று அவருக்கு நான் தலைவணங்குகிறேன். இந்தியாவின் ஒற்றுமை, கண்ணியம், முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அவர் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.
டாக்டர் முகர்ஜியின் பங்களிப்புகள் பல்வேறு துறைகளிலும் பரவியுள்ளன. பாராட்டத்தக்க சிந்தனையாளராகவும், கல்வியாளராகவும் விளங்கிய அவர், புதுமை, எதிர்காலம் சார்ந்த கற்றலுக்கு ஆதரவாக இருந்தார். தொழில்துறை அமைச்சர் என்ற முறையில் பாரம்பரிய துறைகளையும், வாழ்வாதாரங்களின் வளர்ச்சியையும் உறுதிசெய்துகொண்டே தொழில்துறை தற்சார்புக்கு அவர் அடித்தளம் அமைத்தார். வங்கப் பஞ்சத்தின்போது அவரது மனிதாபிமான முயற்சிகள், பேரிடர்களின்போது அவரது பேரளவிலான கருணையை பிரதிபலித்தன. அனைத்திற்கும் மேலாக இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் அவரது அசைக்க முடியாத உறுதிப்பாடு நீடிக்கும் ஊக்கசக்தியாக விளங்குகிறது.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பயணத்தில் நாம் முன்னேறிச் செல்லும் நிலையில், அவரது தொலைநோக்குப் பார்வை நமது பாதைக்கு தொடர்ந்து ஒளி விளக்காக திகழ்கிறது.
***
(Release ID: 2281489)
SS/SMB/LDN/RJ
(रिलीज़ आईडी: 2281622)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam