திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் புத்தாக்கத் தளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு ஜூலை 15 வரை நீட்டிப்பு
प्रविष्टि तिथि:
05 JUL 2026 6:56PM by PIB Chennai
நாடு முழுவதிலுமுள்ள புதுமைப் படைப்பாளர்களிடமிருந்து கிடைத்த பெரும் ஆர்வத்திற்கு பதிலளிக்கும் விதமாக, திறன் மேம்பாட்டு அமைச்சகம் (MSDE), தனது முதன்மை தேசிய புத்தாக்கத் தளமான நவாச்சார் மந்திராவில் (Navachar Mantra) பதிவுக்கான காலக்கெடுவை 15 ஜூலை 2026 வரை நீட்டித்துள்ளது. இதன் மூலம், மேலும் பல ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு நம்பிக்கைக்குரிய யோசனைகளை வெற்றிகரமான முயற்சிகளாக மாற்றுவதற்கான வாய்ப்பை இது வழங்கும்.
ஆர்வமுள்ள தொழில்முனைவோர், புதுமையாளர்கள் ஆகியோரிடமிருந்து, அதிகாரப்பூர்வ நவாச்சார் மந்திரா பதிவு இணையதளம் வழியாக இதுவரை ஆயிரக்கணக்கான பதிவுகள் பெறப்பட்டுள்ளன. நீட்டிக்கப்பட்ட பதிவுக் காலம், இன்னும் அதிகமான பதிவுகளை ஈர்ப்பதோடு, இந்தியா முழுவதிலுமிருந்து மேலும் பல புதுமையான யோசனைகளையும் வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் தொடங்கப்பட்ட நவாச்சார் மந்திரா, தேசிய தொழில்முனைவோர் - சிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. இதில், தில்லி ஐஐடி-யின் புத்தாக்க தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான அறக்கட்டளை அறிவுசார் கூட்டு நிறுவனமாகச் செயல்படுகிறது. இந்த முன்முயற்சியானது, கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல், நிபுணர்களின் அறிவுரை, தொழில்துறை இணைப்பு, சந்தை அணுகல் ஆகியவற்றின் மூலம் ஆற்றல் வாய்ந்த தொழில்முனைவோரின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்முனைவுக்கான ஒரு விரிவான தளமாக வடிவமைக்கப்பட்டுள்ள நவாச்சார் மந்திரா நிறுவன ரீதியான ஆதரவை வழங்குகிறது. நாடு முழுவதும் தொழில்முனைவுக்கான ஒரு உகந்த சூழலை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறித்து மேலும் அறிய https://nm.fitt-iitd.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான இணையதளம்: https://accubate.fitt-iitd.in/ext/form/23520/1/apply?source=Print&medium=post
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281354®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2281416)
आगंतुक पटल : 10