பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்கா சுதந்திரம் அடைந்ததன் 250-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அமெரிக்க அதிபருக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUL 2026 9:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க நாட்டின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்ப்புக்கும், அமெரிக்க மக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பின் நீடித்த வலிமையை திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான உறவானது ஒரு உத்திசார் ஒத்துழைப்புக்கு அப்பாற்பட்டது என்றும், அது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மக்களின் எல்லையற்ற ஆற்றல் ஆகிய பகிரப்பட்ட விழுமியங்களில் வேரூன்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"140 கோடி இந்தியர்கள் சார்பாக, அமெரிக்க சுதந்திரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதிபர் டிரம்ப் அவர்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவும் அமெரிக்காவும் வெறும் உத்திசார் ஒத்துழைப்பைத் தாண்டி பலவற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நமது மக்களின் எல்லையற்ற ஆற்றல் ஆகியவற்றின் மீதான நமது பகிரப்பட்ட நம்பிக்கை, நமது நட்பை உலக நன்மைக்கான ஒரு சக்தியாக ஆக்குகிறது.

அடுத்த 250 ஆண்டுகள் அமெரிக்காவிற்கு மேலும் செழிப்பையும், அமைதியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வந்து, இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லட்டும்."

***

(Release ID: 2281164)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2281299) வருகையாளர் எண்ணிக்கை : 48