பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் சனந்தில் செமிகண்டக்டர் ஆலையின் தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
04 JUL 2026 9:48PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத்தின் சனந்த் நகரில், சிஜி செமி அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் அசெம்பிளி அண்ட் டெஸ்ட் ஆலையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், தேசம் தனது இலக்குகளை அடைவதில் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இந்தத் தொடக்க விழா ஒரு சான்றாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார். நாடு தனது வலுவான தீர்மானங்களைத் தயக்கமின்றித் தொடர்ந்து உறுதியான செயல் வடிவங்களாக மாற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
சிஜி செமி அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் அசெம்பிளி அண்ட் டெஸ்ட் ஆலையைத் திறந்து வைப்பதற்காக சனந்திற்குச் சென்றது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. இது, இந்தியாவை குறைக்கடத்தித் தொழில்நுட்பங்களுக்கான மையமாக மாற்றுவதற்கான நமது முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்."
"சனந்தில் உள்ள சிஜி செமியின் ஆலை, தொழில்நுட்பம், நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து, இந்தியாவின் குறைக்கடத்திப் பயணத்திற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்."
"குறைக்கடத்திகள் என்பவை மின்னணுப் புரட்சியின் அடுத்த கட்டமாகும். எனவே, கைபேசிகள், மின்னணு சாதனங்களுடன் சேர்த்து, முழு உலகிற்கும் ஆற்றலளிக்கும் சிப்-களையும் நாம் உற்பத்தி செய்யப் போகிறோம்."
***
(Release ID: 2281165)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2281297)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam