ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் 5-வது நிர்வாகக் குழு கூட்டம்

प्रविष्टि तिथि: 03 JUL 2026 8:34PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் (CCRAS) 5-வது நிர்வாகக் குழு கூட்டம், ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடெச்சா தலைமையில் நடைபெற்றது. ஆராய்ச்சி, கல்வி, அறிவியல் ரீதியான எழுத்துப்பணிகள் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட மூன்று முக்கிய முன்முயற்சிகளைத் தொடங்கியதன் மூலம், நாட்டின் சான்றுகள் அடிப்படையிலான ஆயுர்வேத ஆராய்ச்சிச் சூழலை மேலும் வலுப்படுத்துவதில் இந்தக் கூட்டம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.

கூட்டத்தில் பேசிய வைத்யா ராஜேஷ் கோடேச்சா, சான்றுகளின் அடிப்படையில் அமைந்த ஆயுர்வேத ஆராய்ச்சி, கல்வி மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில்  ஆற்றியுள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைப் பாராட்டினார். தேசிய ஆராய்ச்சிச் சூழலியலை வலுப்படுத்துவதில் அந்தக் கவுன்சில் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை அவர் பாராட்டியதுடன், புதுமை மற்றும் சிறந்து விளங்கும் தன்மையை நோக்கித் தொடர்ந்து செயல்படுமாறும் அமைப்பை ஊக்குவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280911&reg=3&lang=1

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2281219) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Punjabi , Urdu