சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார்

प्रविष्टि तिथि: 04 JUL 2026 4:22PM by PIB Chennai

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் போதைப் பொருள் தடுப்பை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான கட்டமைப்பான 'போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய செயல் திட்டத்தை' செயல்படுத்துகிறது. இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கமும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய சமூக நீதி அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் கூறுகையில் போதைப் பொருள் ஒழிப்பில், பொதுமக்கள், மாநில, யூனியன் பிரதேச அரசுகள், துறைசார் அமைச்சகங்கள், சமூகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஒட்டுமொத்த அணுகுமுறையின் மூலம் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், நாடு முழுவதும் 768 மறுவாழ்வு மையங்களை அரசு விரிவுபடுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281067&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2281126) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam