உள்துறை அமைச்சகம்
அமர்நாத் யாத்திரையில் பங்கேற்கும் அனைத்து யாத்ரீகர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
03 JUL 2026 7:58PM by PIB Chennai
அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கியுள்ளதையடுத்து, அங்கு பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக பயணம் மேற்கொள்ளும் அனைத்து யாத்ரீகர்களுக்கும், அவர்களது புனிதப் பயணம், வழிபாடு சிறப்பாக அமைவதற்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில், அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "அமர்நாத் யாத்திரை என்பது சனாதன கலாச்சாரத்தின் மீதான வலுவான பக்தி, உறுதியான பொறுமை, சுயக்கட்டுப்பாடு, தோல்வியை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாத மன உறுதி ஆகியவற்றின் புனிதமான அடையாளங்களாகும். இன்று இந்த பரிசுத்தமான பயணத்தின் மங்களகரமான தொடக்கம் அமைகிறது. பாபா பர்ஃபானியைத் தரிசித்து வழிபடச் செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள். ஒவ்வொரு யாத்ரீகரின் பயணமும் பாதுகாப்பானதாகவும், சுமூகமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், கியூஆர் குறியீடு அடிப்படையிலான பதிவு, பக்தர்களுக்கான தங்குமிடம், மருத்துவச் சேவைகள், பேரிடர் மேலாண்மை வசதிகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹர்-ஹர் மகாதேவ்!" என்று திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280893®=3&lang=1
(Release ID: 2280893)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2280970)
आगंतुक पटल : 4