இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
'மை பாரத்' டிஜிட்டல் தளம் வாயிலாக, தொழில்துறை - இளைஞர்கள் இடையே வலுவான ஒத்துழைப்பை உருவாக்க, மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்துள்ளார்
प्रविष्टि तिथि:
03 JUL 2026 4:51PM by PIB Chennai
நாட்டில் உள்ள இளைஞர்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு - தொழில் துறைக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, மத்திய இளையோர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இளைஞர் விவகாரங்கள் துறை, புது தில்லியில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'தொழில் துறை சங்கங்களின் மாநாட்டை' நடத்தியது. 'மை பாரத்' தளத்தின் மூலம் உத்திகள் சார்ந்த ஒத்துழைப்புக்களை உருவாக்க, 20-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் துறை சங்கங்கள், பெருநிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிஎஸ்ஆர் அமைப்புகள், மூத்த அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், திறன் மேம்பாடு, தன்னார்வத் தொண்டு, தொழிற்பயிற்சி, தொழில்முனைவு, புத்தாக்கம், பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றின் மூலம் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் இம்மாநாடு கவனம் செலுத்தியது.
இந்த மாநாட்டின் தொடக்க விழாவில், மத்திய இளையோர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, அத்துறைக்கான இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே, அதன் செயலாளர் டாக்டர் பல்லவி ஜெயின் கோவில், மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திருமதி தீப்தி கௌர் முகர்ஜி, இளைஞர் விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் திரு நிதேஷ் குமார் மிஸ்ரா, முன்னணி தொழில் துறை சங்கங்கள், சிஎஸ்ஆர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, அரசுக்கும், தொழில் துறைக்கும் இடையேயான ஒத்துழைப்புகள் மூலம் இளைஞர்களுக்கான வாய்ப்புகளுடன் உருவாக்கப்படும் போது, இந்தியாவின் மக்கள்தொகையின் எண்ணிக்கை அதன் மிகப்பெரிய வலிமையாக உருவெடுக்கும் என்று கூறினார். "இந்தியாவின் மக்கள் தொகையில், 65 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், நாட்டில் உள்ள இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய வலிமை, மென் ஆற்றல் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280767®=3&lang=1
(Release ID: 2280767)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2280884)
आगंतुक पटल : 10