எஃகுத்துறை அமைச்சகம்
எஃகு இறக்குமதி தொடர்பான சிக்கல்கள் குறித்து, மத்திய எஃகு அமைச்சகம் ஜூலை 9 அன்று கலந்துரையாடல் கூட்டத்தை நடத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
03 JUL 2026 3:28PM by PIB Chennai
எஃகு இறக்குமதி தொடர்பான சிக்கல்கள் குறித்து விவாதிக்க, மத்திய எஃகு அமைச்சகம் 2026 ஜூலை 9 அன்று, புதுதில்லியில் உள்ள நேதாஜி நகர், ஜிபிஓஏ-3, 3-வது தளத்தில் ஒரு வெளிப்படையான கலந்துரையாடல் கூட்டத்தை நடத்துகிறது. இக்கூட்டத்தில், நிறுவனங்கள், சங்கங்கள் எஃகு இறக்குமதி தொடர்பாக எதிர்கொண்டு வரும் சிக்கல்களை முன்வைக்கலாம். இந்த கூட்டத்தில் பங்கேற்கவும், குறிப்பிட்ட தேதியில் கலந்துரையாடல் கூட்டத்திற்கான நேரத்தை உறுதிப்படுத்தவும் tech-steel[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, மின்னஞ்சல் அனுப்பலாம் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மின்னஞ்சலுடன் பின்வரும் விவரங்களை இணைக்க வேண்டும்:
நிறுவனம் அல்லது சங்கத்தின் பெயர்
தொழில், தயாரிப்பு வகை – வாகனத் துறை, விண்வெளித் துறை, தொலைத்தொடர்பு, பாதுகாப்புத் துறை போன்றவை.
பிரச்சனை எதனுடன் தொடர்புடையது: எஸ்ஐஎம்எஸ் / சாரல் எஸ்ஐஎம்எஸ் / கியூசிஓ விலக்கு
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், அதற்கான எஸ்ஐஎம்எஸ் / சாரல் எஸ்ஐஎம்எஸ் / கியூசிஓ விலக்கு விண்ணப்பக் குறிப்பு எண்
சிக்கல் குறித்த சுருக்கமான விவரம் (அதிகபட்சம் 50 வார்த்தைகள்)
பங்கேற்பாளரின் பெயர், பதவி (மூன்றாம் தரப்பு பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்பட மாட்டாது)
பங்கேற்பாளரின் தொடர்பு விவரங்கள் (கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல்)
இந்தக் கலந்துரையாடல் கூட்டம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்கான குறிப்பிட்ட நேர ஒதுக்கீடு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நிர்வாகக் காரணங்களால் முன்பதிவு இன்றி நேரடியாக பங்கேற்பதற்கான சாத்தியமில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு நிறுவனத்திலிருந்து ஒரு பிரதிநிதி மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
எஃகு இறக்குமதி விவகாரங்களில் சிக்கல்களை எதிர்கொண்ட நிறுவனங்கள் அல்லது சங்கங்கள், கூட்டத்திற்கான நேரத்தை உறுதிப்படுத்த ஜூலை 6, 2026 அன்று மாலை 4 மணிக்குள் மேற்கூறிய மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களது கோரிக்கையை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
***
(Release ID: 2280700)
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2280860)
வருகையாளர் எண்ணிக்கை : 46