அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பீகாரில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கண்டறியப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 03 JUL 2026 3:43PM by PIB Chennai

பீகார் மாநிலம் முங்கேரில் உள்ள சுமார் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமாக வயது கணிக்கப்பட்ட மிகப் பழமையான ஆலமரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான பீர்பல் சாஹ்னி பழங்கால அறிவியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், கதிரியக்கக் கார்பன் காலக் கணிப்பு முறையின் மூலம் இந்த முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வரலாற்றுப் பதிவுகள், உள்ளூர் மரபுவழிச் செய்திகள் அடிப்படையில் மட்டுமே ஆலமரங்களின் வயது கணிக்கப்பட்ட நிலையில், இந்த ஆய்வு புதிய அறிவியல் அணுகுமுறையை உருவாக்கியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, பாரம்பரியம் மிக்க மரங்களை துல்லியமாக அடையாளம் கண்டு பாதுகாக்க அரசு, வனத்துறை, பாதுகாப்பு அமைப்புகளுக்கு உதவும். தெற்காசியா உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளில் உள்ள பழமையான மரங்களின் வயதைக் கணிக்கவும் இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280710&reg=3&lang=1

***

SS/PD/KR


(रिलीज़ आईडी: 2280814) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu