தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சிக்கிமின் காங்டாக், பக்யோங் மாவட்டங்களில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் ஆய்வு செய்தது
प्रविष्टि तिथि:
03 JUL 2026 12:32PM by PIB Chennai
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) கொல்கத்தா மண்டல அலுவலகம், சிக்கிம் மாநிலத்தின் காங்டாக், பக்யோங் மாவட்டங்கள், காங்டாக்கின் தியோராலி பஜார் முதல் நாதுலா கணவாய் வரையிலான தேசிய நெடுஞ்சாலை-310 ஆகிய பகுதிகளில் கடந்த மே மாதம் கள ஆய்வு மேற்கொண்டு மொபைல் நெட்வொர்க் சேவையின் தரத்தை மதிப்பீடு செய்துள்ளது. குரல் அழைப்பு, தரவு சேவை, சிக்னல் கிடைக்கும் தன்மை, அழைப்பு துண்டிப்பு, பதிவிறக்க, பதிவேற்ற வேகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களின் சேவைகள் இதில் மதிப்பிடப்பட்டன. பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முன்னிலை பெற்றுள்ளது. ஏர்டெலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. மொபைல் பயனர்களின் விழிப்புணர்வுக்காகவும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் சேவையை மேம்படுத்தவும் இந்த விவரங்கள் பயனுள்ளதாக இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களின் பகுதிகளில் உள்ள நெட்வொர்க் நிலவரங்களை இதன் மூலம் துல்லியமாக அறிந்துகொள்ளலாம். இது குறித்த முழுமையான அறிக்கை ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280639®=3&lang=1
***
SS/PD/KR
(रिलीज़ आईडी: 2280777)
आगंतुक पटल : 8