குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் தேசிய பட்டியலினத்தவர்-பழங்குடியினர் தொழில்முனைவோர் மையத் திட்டம்

प्रविष्टि तिथि: 03 JUL 2026 9:50AM by PIB Chennai

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் தேசிய பட்டியலினத்தவர்-பழங்குடியினர் தொழில்முனைவோர் மையத் திட்டம், பட்டியலினத்தவர், பழங்குடியின தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய முன்முயற்சியாகும்.

இத்திட்டம் சந்தை அணுகல், நிதி வசதி, தொழில்நுட்ப பயன்பாடு, திறன் மேம்பாடு, நிறுவன ஆதரவு ஆகியவற்றை வழங்குவதுடன், தொழில் போட்டித்திறன், நிலைத்தன்மை ஆகியவற்றையும் வலுப்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் தொழில் மேம்பாட்டுத் திட்டம் வழிகாட்டுதல், தொழில்துறை றிவு, இலக்கு அடிப்படையிலான தொழில் மேம்பாட்டு ஆதரவு வாயிலாக தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. நிதி மேலாண்மை, அரசு ஒப்பந்தங்களில் பங்கேற்பு, விலை நிர்ணய உத்திகள், ஒழுங்குமுறை புரிதல் போன்ற துறைகளில் வழங்கப்படும் பயிற்சிகள் தொழில்முனைவோரின் திறனை மேம்படுத்துகின்றன. இதன் பயனாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தீ பாதுகாப்பு உபகரண உற்பத்தி நிறுவனம் ஒன்று ரூ.8.48 லட்சம் மதிப்பிலான அரசு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அசாமைச் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த தனியார்  நிறுவனம் தனது தொழில் செயல்பாடுகளை வலுப்படுத்தி அரசு கொள்முதல் வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த தனியார் ஹைட்ராலிக் சிலிண்டர் உற்பத்தி நிறுவனம் ரூ.5.10 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. துறைசார் ஆதரவு, திறன் வளர்ப்பு, செயல்திட்ட வழிகாட்டல் ஆகியவற்றின் மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர் தொழிலை விரிவுபடுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280604&reg=3&lang=1

***

SS/PD/KR

 


(रिलीज़ आईडी: 2280648) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी