நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

ஆயுர்வேதத்தை உலக மயமக்குவதற்கான செயல் திட்டம் குறித்த அறிக்கையை நித்தி ஆயோக் வெளியிட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 02 JUL 2026 8:41PM by PIB Chennai

நித்தி ஆயோக், இன்று (2026 ஜூலை 2), "ஆயுர்வேதத்தை உலக மயமாக்குவதற்கான உத்திசார் செயல் திட்டம்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை , ஆயுர்வேதத்தின் உலகளாவிய தாக்கத்தைப் பற்றிய ஒரு விரிவான மதிப்பீட்டை அளிப்பதோடு, அதை உலகமயமாக்குவதற்கான செயல் திட்டத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

நித்தி ஆயோக்கின் உறுப்பினர் பேராசிரியர் எம். சீனிவாஸ், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கோடேச்சா, நித்தி ஆயோக், ஆயுஷ் அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், அரசு அமைப்புகள், ஆராய்ச்சி அமைப்புகள் தரப்பினர் முன்னிலையில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் டாக்டர் அசோக் குமார் லஹிரி இந்த அறிக்கையை வெளியிடப்பட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் திரு அசோக் குமார் லஹிரி, ஆயுர்வேதத்தின் உலகமயமாக்கல், பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியாவை ஒரு உலகளாவிய சக்தியாக நிலைநிறுத்தும் என்றார். அதே நேரத்தில் கணிசமான பொருளாதார மதிப்பை வெளிக்கொணர்வதற்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், ஏற்றுமதியை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவின் கலாச்சாரம், அறிவு சார்ந்த மென்பலத்தை வலுப்படுத்துவதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை இது வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

முழு அறிக்கையை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://niti.gov.in/sites/default/files/2026-07/Strategic-Roadmap-for-Globalization-of-Ayurveda.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280540&reg=3&lang=1

(Release ID : 2280540)

****

TV/PLM/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2280589) வருகையாளர் எண்ணிக்கை : 67
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi