ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மால்டா கோட்டத்தில் ₹274 கோடி மதிப்பில் நவீனமயமாக்கும் பணிகளுக்கு ரயில்வே ஒப்புதல்

प्रविष्टि तिथि: 02 JUL 2026 5:41PM by PIB Chennai

ரயில்வே பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், சிக்னல் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, கிழக்கு ரயில்வேயின் மால்டா கோட்டத்தில் உள்ள 20 இடங்களில், ரிலே அடிப்படையிலான இன்டர்லாக்கிங் முறைக்கு பதிலாக மேம்பட்ட மின்னணு இன்டர்லாக்கிங் முறையை ₹274 கோடி செலவில் நிறுவுவதற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

 

இத்திட்டத்தின் கீழ், கிழக்கு ரயில்வேயின் அதிக பயன்பாட்டு வழித்தடங்களில் அமைந்துள்ள 18 ரயில் நிலையங்களிலும், 2 இடைநிலை வட்டார சமிக்ஞை இடங்களிலும் தற்போதுள்ள ரிலே அறை/பேனல் இன்டர்லாக்கிங் அமைப்புக்கு பதிலாக மின்னணு இன்டர்லாக்கிங் அமைப்பு நிறுவப்படும்.

 

அனுமதிக்கப்பட்ட இந்தத் திட்டமானது, மால்டா கோட்டத்தில் உள்ள 18 நிலையங்கள், 2 ஐபிஎஸ் இடங்கள் உட்பட 20 செயல்பாட்டு இடங்களில், வழக்கமான ரிலே அடிப்படையிலான சமிக்ஞை அமைப்புகளுக்குப் பதிலாக அதிநவீன மின்னணு தொழில்நுட்பத்தைப் பொருத்துவதை உள்ளடக்கியுள்ளது.

 

இந்த நவீனமயமாக்கலானது, சமிக்ஞை அமைப்புகளின் நம்பகத்தன்மை, செயல்திறன், பராமரிப்புத்திறனை கணிசமாக மேம்படுத்துவதோடு, கிழக்கு ரயில்வேயின் மிகவும் பரபரப்பான வழித்தடங்களில் ஒன்றான இதில் வலுவான தொழில்நுட்ப அடித்தளத்தையும் உருவாக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280414&reg=3&lang=1

(Release ID : 2280414)

****

TV/PLM/SH

 


(रिलीज़ आईडी: 2280524) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Urdu , English , हिन्दी , Kannada