குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தலைமைத்துவம் என்பது, சேவையால் தான் அளவிடப்படுகிறது, அதிகாரத்தால் அல்ல - குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்
प्रविष्टि तिथि:
02 JUL 2026 5:57PM by PIB Chennai
மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அஜித் மாதவராவ் கோப்சாடே தொடங்கி வைத்த இரண்டு மாத கால பயிற்சித் திட்டமான 'எம்.பி. லீட் ஃபெலோஷிப்' என்ற பயிற்சித் திட்டப் பங்கேற்பாளர்களுடன் இன்று (02.07.2026) குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார். இளைஞர்கள் நிகழ்ச்சியில் பேசிய அவர் இளைஞர்கள் தேச சேவையில் அர்ப்பணிப்புள்ள தலைவர்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைமை என்பது அதிகாரத்தால் அளவிடப்படுவதில்லை எனவும், மாறாக பணிவு, நேர்மை, கருணையுடன் சமூகத்திற்கு சேவை செய்யும் ஒருவரின் திறனால்தான் அளவிடப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் ஒற்றுமையை எடுத்துரைத்த அவர், பிராந்தியம், மொழி, சாதி ஆகியவற்றைக் கடந்து, இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலான இந்தியாவின் பகிரப்பட்ட கலாச்சாரமே நாட்டின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள், இளைஞர்களுக்கு வகுப்பறைகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தை அறிமுகப்படுத்துவதாகவும், தன்னம்பிக்கையை வளர்ப்பதாகவும், தேசியத் தலைவர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும் அவர் கூறினார். வாய்ப்புகளுக்கு ஏற்ப தகுதியும் தொடர்ச்சியான சுய முன்னேற்றமும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தங்களால் இயன்ற சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அரசியலமைப்பு விழுமியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு சி.பி. ராதாகிருஷ்ணன், மக்கள் தங்கள் உரிமைகளுடன் கடமைகளையும் நிலைநிறுத்தும்போது ஜனநாயகம் தழைத்தோங்கும் என்று கூறினார். ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளவும், அச்சமின்றிப் புதுமைகளைப் புகுத்தவும், பரந்த தேசிய நலனுக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளவும் வேண்டும் என திரு சி. பி. ராதாகிருஷ்ணன் இளைஞர்களை கேட்டுக் கொண்டார்.
மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அஜித் மாதவராவ் கோப்சாடேவின் முன்முயற்சியன "எம்பி லீட் ஃபெலோஷிப்" என்பது, இளைஞர்களுக்கு ஆளுகை, பொதுக் கொள்கை, சட்டமன்ற செயல்முறைகள் ஆகியவற்றில் நேரடி அனுபவத்தை வழங்கும் இரண்டு மாத காலப் பயிற்சித் திட்டமாகும். 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிலிருந்து 40 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்தி குறிப்பில் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280428®=3&lang=1
(Release ID : 2280428)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2280509)
आगंतुक पटल : 15