பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநில பஞ்சாயத்ராஜ் அமைச்சர்களுக்கான தேசியப் பயிலரங்கு நாளை புதுதில்லியில் நடைபெறவுள்ளது

प्रविष्टि तिथि: 02 JUL 2026 4:20PM by PIB Chennai

மாநில பஞ்சாயத்ராஜ் அமைச்சர்களுக்கு தேசியப் பயிலரங்கை மத்திய  பஞ்சாயத்ராஜ் அமைச்சகம் நாளை (03.07.2026) புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.

இந்தப் பயிரலங்கிற்கு மத்திய பஞ்சாயத்ராஜ், மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் தலைமை வகிப்பார். மாநிலங்களின் பஞ்சாயத்ராஜ் அமைச்சர்கள் மூத்த அதிகாரிகளுடன் இதில் பங்கேற்பார்கள்.

2026-31 காலத்திற்கு பஞ்சாயத்ராஜ் அமைப்புகளுக்கு ரூ.4.35 லட்சம் கோடி நிதிப் பகிர்வு செய்ய 16-வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது.  இது குறித்து நாளைய பயிலரங்கில் விவாதிக்கப்படும். மேலும், மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறையால் விடுவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் குறித்த 16-வது நிதிக்குழுவின் அமலாக்கத்திற்கு செயல்திட்ட வழிகாட்டுதல்கள் பற்றியும் இந்த விவாதங்களில் கவனம் செலுத்தப்படும்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280334&reg=3&lang=1

***

SS/SMB/RJ/SH


(रिलीज़ आईडी: 2280500) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati