மக்களவை செயலகம்
மேற்கு வங்க சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான பயிற்சித் திட்டம் - மக்களவைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
02 JUL 2026 2:22PM by PIB Chennai
மேற்கு வங்க சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் அறிமுகப் பயிற்சித் திட்டத்தை, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா நாளை (2026 ஜூலை 3) கொல்கத்தாவில் தொடங்கி வைக்கிறார்.
மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மாநிலங்களவையின் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு ரிதாபிரதா பானர்ஜி, பிற முக்கிய பிரமுகர்கள் தொடக்க அமர்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேற்கு வங்க சட்டப்பேரவை சபாநாயகர் திரு ரதீந்திர போஸ் வரவேற்புரை வழங்குகிறார்.
இரண்டு நாள் பயிற்சித் திட்ட நிகழ்ச்சியின் போது, சட்டமன்றப் பணிகளின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கும் வகையில் பல அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த அமர்வுகளில் பல்வேறு மாநில சட்டமன்றங்களின் சபாநாயகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்பு வல்லுநர்கள் பங்கேற்று உரையாற்றுவார்கள். இந்த நிகழ்ச்சி, கருத்துப் பரிமாற்றத்திற்கும் வழிவகுப்பதோடு, அவை நடைமுறைகள் குறித்த புரிதலையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு, மேற்கு வங்க ஆளுநர் திரு ஆர் என் ரவியின் நிறைவுரையுடன் 4 ஜூலை 2026 அன்று நிறைவடையும்.
இந்த நிகழ்ச்சி, மக்களவைச் செயலகத்தின் கீழ் இயங்கும் ஜனநாயகங்களுக்கான நாடாளுமன்ற ஆராய்ச்சி- பயிற்சி நிறுவனத்தால், மேற்கு வங்க சட்டமன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280256®=3&lang=1
***
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2280484)
आगंतुक पटल : 8