வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வர்த்தகத்துறை, ஆயுஷ் அமைச்சகம், ஆயுஷ் ஏற்றுமதி மேம்பாட்டு சபை ஆகியவற்றின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 02 JUL 2026 11:59AM by PIB Chennai

மத்திய வர்த்தகத்துறை, ஆயுஷ் அமைச்சகம், ஆயுஷ் ஏற்றுமதி மேம்பாட்டு சபை ஆகியவை புதுதில்லியில் உள்ள வணிஜ்ய பவனில் ஆயுஷ்துறை குறித்த அரசு-தொழில்துறை ஆலோசனைக் கூட்டத்தை இன்று (2.07.2026) நடத்தின.

“பாரம்பரிய நலனில் இந்தியாவின் உலகளாவிய தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல்: ஆயுஷ் துறையில் புத்தாக்கம், தரம், ஏற்றுமதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு” என்பது இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மையப்பொருளாகும். இதில் மூத்த அரசு அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள், பொருள் உற்பத்தியாளர்கள், எம்எஸ்எம்இ, புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆய்வாளர்கள், அரசு உரிமம் தரும் அதிகாரிகள் உட்பட 150-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இந்தியாவின் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள், ஆயுஷின் உலகளாவிய குறியீடு, ஏற்றுமதி வசதிக்கான நடவடிக்கைகள், ஒழுங்குமுறை மற்றும் சந்தை அணுகல் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான வியூகங்கள் போன்ற விஷயங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ஆயுஷ் ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அனுராக் ஷர்மா, பாரம்பரிய மருத்துவத்திற்கு அதிகரித்து வரும் உலகளாவிய அங்கீகாரம் பற்றி எடுத்துரைத்தார். ஒட்டுமொத்த சுகாதாரத்திற்கு நம்பிக்கை தரும் உலகளாவிய மையமாக இந்தியா நன்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் உறுதிபட தெரிவித்தார். அறிவியல் சார்ந்த மதிப்பீடு, தர உத்தரவாதம், புத்தாக்கம் ஆகியவற்றை வலுப்படுத்த அரசு, தொழில்துறை, ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.    

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280210&reg=3&lang=1  

***

SS/SMB/RJ/KR

 


(रिलीज़ आईडी: 2280269) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati