சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
காசநோய் இல்லா இந்தியா திட்டம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
प्रविष्टि तिथि:
01 JUL 2026 6:03PM by PIB Chennai
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.ஜே.பி. நட்டா, தில்லி அரசுடன் இணைந்து 'காசநோய் இல்லா இந்தியா' மற்றும் 100 நாள் பிரச்சாரத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தினார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு.நட்டா, காசநோயை ஒழிக்க அரசு இயந்திரம் மட்டும் போதாது என்றும், இது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள காசநோய் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், களப்பணியில் அவர்களின் பங்களிப்பு மிக அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு வார்டிலும் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கையடக்க எக்ஸ்-ரே கருவிகள் மூலம் ஆரம்பகால நோயறிதலை அதிகரிக்கவும் உத்தரவிட்டார்.
அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி. ஆராதனா பட்நாயக், தில்லியில் 38 அதிக பாதிப்புள்ள வார்டுகள் கண்டறியப்பட்டு, அங்கு இலக்கு நோக்கிய தீவிர பணிகள் நடைபெறுவதாகத் தெரிவித்தார். தில்லியில் இதுவரை 28.83 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டு, 1.75 லட்சம் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் அனைத்து சந்தேகத்திற்குரிய நபர்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைகள் செய்யவும், சமூக தன்னார்வலர்களின் உதவியுடன் நோயாளிகளுக்குத் தொடர் ஆதரவு வழங்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அரசு, சமூகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடே காசநோய் இல்லா இந்தியாவை சாத்தியமாக்கும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279976®=3&lang=1
செய்தி அடையான எண்:2279976
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2280147)
आगंतुक पटल : 5