நிதி அமைச்சகம்
நாடு தழுவிய சோதனையில் 9 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் ரூ.8.5 கோடி வெளிநாட்டு நாணயங்களைப் பறிமுதல் செய்தது வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUL 2026 4:11PM by PIB Chennai
வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து பல்வேறு ரயில்கள் மூலம் தில்லிக்கு வெளிநாட்டுத் தங்கத்தைக் கடத்தி வந்த கும்பலை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இக்கும்பல் தில்லியின் மக்கள் குடியிருப்புப் பகுதியில் ரகசியமாகத் தங்க உருக்காலை ஒன்றை நடத்தி வந்துள்ளது.
மேற்கு வங்கம், பீகார் மற்றும் தில்லியில் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட சோதனைகளில், 3.2 கிலோ கடத்தல் தங்கத்துடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், தில்லியில் செயல்பட்ட சட்டவிரோத தங்க உருக்காலையும் கண்டறியப்பட்டது. மற்றொரு சோதனையில், ரயிலில் கடத்தப்பட்ட 3.3 கிலோ தங்கத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், சென்னை விமானச் சரக்ககத்தில் நடத்தப்பட்ட சோதனையில், தங்கம் மற்றும் வெள்ளிக் கடத்தலுக்கு நிதி உதவி அளிக்கப் பயன்படுத்தப்பட்ட ரூ.8.15 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாகப் பெங்களூரு விமான நிலையத்தில் ஒருவர் 1.8 கிலோ தங்கத்துடன் பிடிபட்டார். அவரது இல்லத்திலிருந்து 42 கிலோ வெள்ளி, 700 கிராம் நகைகள் மற்றும் ரூ.26.67 லட்சம் இந்திய நாணயம் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒட்டுமொத்தமாக இந்தச் சோதனைகளில் 9 கிலோ தங்கம், 42 கிலோ வெள்ளி, ரூ.8.15 கோடி வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279864®=3&lang=1
****
TV/EA/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2280129)
வருகையாளர் எண்ணிக்கை : 60