சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திருத்தியமைக்கப்பட்ட வரைவு தேசிய மருந்தியல் ஆணைய மசோதா 2026 குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கருத்துகளை வரவேற்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUL 2026 4:42PM by PIB Chennai

தேசிய மருந்தியல் ஆணையத்தை அமைப்பதற்கும் 1948-ம் ஆண்டு மருந்தியல் சட்டத்திற்கு மாற்றாக முன்மொழியப்பட்ட தேசிய மருந்தியல் ஆணைய மசோதா 2026-ன் வரைவு பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகளை பரிசீலித்தப்பின் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட வரைவு தேசிய மருந்தியல் ஆணைய மசோதா 2026 சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தை மேலும் செம்மைப் படுத்தும் வகையில் பொதுமக்களிடமிருந்தும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தும் கருத்துக்கள் கோரப்படுகின்றன. இக்கருத்தை 2026 ஜூலை 31-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279890&reg=3&lang=1

(Release ID: 2279890)

****

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2280018) வருகையாளர் எண்ணிக்கை : 72
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam