விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் நாளை ஹரியானா செல்கிறார்

प्रविष्टि तिथि: 29 JUN 2026 9:35PM by PIB Chennai

மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், ‘விவசாய நிலங்களைப் பாதுகாப்போம்’ திட்டத்தின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நாளை (30.06.2026) ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள பாவல் பகுதிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஜூன் 30 காலை பாவல் பகுதிக்கு வரும் அவர், நவீன விவசாய முறைகள், மண்வள மேலாண்மை, கால்நடை பராமரிப்பு, ஊரக வாழ்வாதார முயற்சிகள் குறித்த கண்காட்சியைப் பார்வையிடுகிறார். அதன் பின்னர் நடைபெறும் நிறைவு விழாவில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகிறார். அப்போது விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், நிபுணர்களுடன் அவர் நேரடியாகக் கலந்துரையாட உள்ளார்.

பயிர்ப் பாதுகாப்பு, பயிர் இழப்புகளைக் குறைத்தல், இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவித்தல், மத்திய அரசின் திட்டங்கள் விவசாயிகளை நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்தல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்நிகழ்வில் ஹரியானா மாநில வேளாண் அமைச்சர் திரு ஷியாம் சிங் ராணா, மூத்த அதிகாரிகள், உள்ளூர் விவசாயிகள் பங்கேற்றுத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279210&reg=3&lang=1

***

SS/PD


(रिलीज़ आईडी: 2279756) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Punjabi , Gujarati