விவசாயத்துறை அமைச்சகம்
அருணாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் நேரில் பார்வையிடுகிறார்
प्रविष्टि तिथि:
29 JUN 2026 9:33PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில், மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் வடகிழக்கு மாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜூன் 30 அன்று புதுதில்லியிலிருந்து புறப்படும் அவர், அன்றைய தினமே அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற உள்ள உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்.
இக்கூட்டத்தில் அசாம் அரசின் மூத்த அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகள், பயிர் இழப்புகள், நிவாரணப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, ஜூலை 1 அன்று அருணாச்சல பிரதேசத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் நேரில் பார்வையிடுகிறார்.
அங்கு வான்வழியாகவும், நேரடியாகவும் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட கிராமங்கள், விவசாய நிலங்கள், நிவாரண முகாம்களின் நிலைகளை அவர் மதிப்பிடுகிறார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள், உள்ளூர் மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களின் தேவைகளைக் கேட்டறிய உள்ளார். அருணாச்சல பிரதேச அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பயிர் இழப்பீடு தொடர்பாகவும், சேதமடைந்த சாலைகள், உள்கட்டமைப்புகளை சீரமைப்பது குறித்தும் அவர் ஆலோசிக்க உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279209®=3&lang=1
***
SS/PD
(रिलीज़ आईडी: 2279754)
आगंतुक पटल : 16