சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தாய், சேய் ஆரோக்கியத்தை மேம்படுத்த ‘சுமன் வழிகாட்டி வரைபடம் 2030’: மத்திய அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 29 JUN 2026 6:43PM by PIB Chennai

மத்திய சுகாதார, குடும்ப நலக் கவுன்சிலின் 16-வது மாநாட்டில், தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகளின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ‘சுமன் வழிகாட்டி வரைபடம் 2030’ என்ற விரிவான திட்டத்தை மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா இன்று வெளியிட்டார். 2030-க்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்ட இத்திட்டம் வழிவகுக்கும்.

மகப்பேறுகாலம், பிரசவம், பிரசவத்திற்குப் பிந்தைய காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்தை முழுமையாகக் கண்காணிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதிக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள 13 மாநிலங்களின் 130 மாவட்டங்களில் இத்திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படும்.

இந்த வழிகாட்டி வரைபடம், மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பிற்கான சிறந்த மையங்களை மேம்படுத்துதல், குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஒரு மையப்படுத்தப்பட்ட சுமன் அழைப்பு மையத்தை நிறுவுதல் மற்றும் ‘ஜனனி’ இணையதளம் மூலமாக வலுவான டிஜிட்டல் கண்காணிப்பு, அறிக்கையிடல் வழிமுறைகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.

இதன் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரம்பகாலப் பதிவு, முழுமையான பரிசோதனைகள், ஆஷா பணியாளர்கள் மூலம் எட்டாவது, ஒன்பதாவது மாதங்களில் வாரத்திற்கு இருமுறை நேரடியாக வீடுகளுக்கே சென்று கர்ப்பிணிகளின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும். இதன் மூலம் 2030-க்குள் மகப்பேறு இறப்பு விகிதத்தை ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 70-க்கும் கீழாகக் குறைக்கவும், பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279077&reg=3&lang=1

***

SS/PD


(रिलीज़ आईडी: 2279752) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu