மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை: நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை சமர்ப்பிப்பு

प्रविष्टि तिथि: 16 JUN 2026 6:42PM by PIB Chennai

மாநிலங்களவை உறுப்பினர் திரு திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலம், விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது 379-வது அறிக்கையை இன்று (16.06.2026) மாநிலங்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்தது. மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் 2025-26 நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கைகள் குறித்த குழுவின் முந்தைய 365-வது அறிக்கையின் பரிந்துரைகள் மீது மத்திய அரசு எடுத்த விரிவான நடவடிக்கைகள் குறித்து இந்த அறிக்கை தெளிவாக விளக்குகிறது.

முன்னதாக 2026 மே 21 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்தில் இந்தத் திட்ட அறிக்கை விரிவாக விவாதிக்கப்பட்டு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இளம் பெண்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், மணிப்பூர் நிவாரண முகாம்களில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்குத் தேவையான கூடுதல் நிதியுதவி, அங்கன்வாடி மையங்களை அரசுப் பள்ளிகளுடன் ஒருங்கிணைக்கும் தேசிய அளவிலான திட்டம் ஆகியவை குறித்து இந்த அறிக்கையில் முக்கியப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் புத்தொழில் நிறுவனங்கள் அமைக்கும் பெண்களுக்கான நாரி அதாலத், பெண்கள் உதவி மையம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி, அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த நிதி ஒதுக்கீடுகளை முறைப்படுத்த வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைக்குழு அறிக்கை https://sansad.in/rs/committees/16?departmentally-related-standing-committees என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273673&reg=3&lang=1

***

SS/PD


(रिलीज़ आईडी: 2279738) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी