சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக மருந்தியல் தரக்கட்டுப்பாட்டில் இந்தியாவின் பங்களிப்பு
प्रविष्टि तिथि:
18 JUN 2026 2:00PM by PIB Chennai
பிரேசிலில் ஜூன் 15 முதல் 17 வரை நடைபெற்ற 16-வது உலக மருந்தியல் பேரவைக் கூட்டத்தில், இந்திய மருந்தியல் ஆணையம் பங்கேற்றது. இந்தியக் குழுவிற்கு டாக்டர் வி. கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நடந்த இக்கூட்டத்தில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்திய மருந்தியல் தரநிலைகள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது இங்கு உறுதிப்படுத்தப்பட்டது. குறிப்பாக, காசநோய், புற்றுநோய், இரத்த சோகைக்கான மருந்துகளின் தரத்தை நிர்ணயிப்பதில் இந்தியா ஆற்றி வரும் தலைசிறந்த பங்களிப்பு உலகளவில் பாராட்டப்பட்டது.
நவீன நுணுக்கங்கள், மருந்தியல் ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இந்தியக் குழு தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டது. உலகளாவிய நோயாளிகளின் நலனுக்காக, மருந்துகளின் தரம், பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியாவின் தலைமைப் பண்பை இக்கூட்டம் மீண்டும் உலகிற்கு உணர்த்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274525®=3&lang=1
***
SS/VK/PD
(रिलीज़ आईडी: 2279707)
आगंतुक पटल : 17