மருந்துகள் துறை
மருந்துத் துறையில் 12 ஆண்டுகாலப் புரட்சி: மலிவு விலை மருத்துவமும் தற்சார்பு இந்தியாவும்
प्रविष्टि तिथि:
17 JUN 2026 5:31PM by PIB Chennai
கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியாவின் மருந்தகத் துறை 'உலகின் மருந்தகம்' என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்தியுள்ளது. மலிவு விலை மருத்துவத்தை உறுதி செய்யும் நோக்கில், பிரதமரின் மலிவு விலை மற்றும் தரமான மருத்துவம் திட்டம் மாபெரும் புரட்சியைச் செய்துள்ளது. 2014-ல் வெறும் 84-ஆக இருந்த மலிவு விலை மருந்தகங்கள், 2026-ல் 19,200-க்கும் மேலாக உயர்ந்துள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் ரூ.40,000 கோடிக்கும் மேலாகச் செலவைக் குறைத்துள்ளனர்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் 'உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை' திட்டங்கள் மூலம், மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் துறையில் பெருமளவிலான முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப் பட்டுள்ளன. ஆந்திரா, குஜராத், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்படும் 'மொத்த மருந்து உற்பத்தி பூங்காக்கள்' மற்றும் மருத்துவக் கருவி பூங்காக்கள், இறக்குமதிச் சார்பைக் குறைத்து இந்தியாவைத் தற்சார்பு கொண்டதாக மாற்றுகின்றன. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 'உயிரி மருந்து திட்டம், உயிரி மருந்துகள் துறையில் புதிய உச்சத்தைத் தொட வழிவகுத்துள்ளது. இத்தகைய சீர்திருத்தங்கள், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274104®=3&lang=1
***
SS/VK/PD
(रिलीज़ आईडी: 2279695)
आगंतुक पटल : 18