கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவு அமைச்சகம் நிறுவப்பட்டதன் ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு, ஒரு வாரகால கொண்டாட்டங்கள் துவக்கம்

प्रविष्टि तिथि: 30 JUN 2026 5:37PM by PIB Chennai

தனது ஐந்தாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கூட்டுறவு அமைச்சகம் ஒரு வார கால கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ளது. அமைச்சகத்தின் சாதனைகள், முன்முயற்சிகள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு ஆகியவற்றை நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன், 2026 ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை நாடு தழுவிய அளவிலான ஒரு பிரச்சாரமாக இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

 

ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியும், கூட்டுறவுத் துறையின் முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்ட கருப்பொருள்களை மையமாகக் கொண்டு  வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களின் மாற்றம், டிஜிட்டல் கூட்டுறவு, நிதிசார் விழிப்புணர்வு, விவசாயிகளின் நலன், பால் மற்றும் மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்கள், தானிய சேமிப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், கூட்டுறவு தொடர்பான கலந்துரையாடல் மற்றும் பொது விழிப்புணர்வு, பசுமை வளர்ச்சி, இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்கேற்பு, கூட்டுறவுத் துறையின் வெற்றிச் செய்திகளைப் பரப்புதல் ஆகியவை அடங்கும்.

 

கூட்டுறவு நிறுவனங்களில் 'கூட்டுறவு உறுதிமொழியேற்பு' நிகழ்வுடன் 2026 ஜூன் 29 அன்று கொண்டாட்டங்கள்  துவங்கின. இதனைத் தொடர்ந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களின் கணினிமயமாக்கல், டிஜிட்டல் சேவைகள், நிதிசார் விழிப்புணர்வு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அடிமட்ட அளவில் கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

 

 

2026 ஜூலை 6 அன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெறும் தேசிய அளவிலான நிறைவு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279435&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2279627) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Kannada