எரிசக்தி அமைச்சகம்
மின் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுதில்லியில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
30 JUN 2026 4:19PM by PIB Chennai
மத்திய மின்சார ஆணையம் பிஎஸ்இஎஸ் நிறுவனத்துடன் இணைந்து புதுதில்லியில் மின் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று (29.06.2026) நடத்தியது. "இன்றைய விழிப்புணர்வு, நாளைய தடுப்பு: மின்சாரக் கசிவு தீ விபத்துகளைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைவோம்" என்பது இந்தாண்டு மாநாட்டின் கருப்பொருளாகும்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் விடுத்த காணொளிச் செய்தியில், வளர்ச்சியடைந்த இந்தியா 2047-க்கான பயணத்தில் மின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றார். மின் பாதுகாப்பு குறித்த 'வித்யுத் சுரக்ஷா போத்' என்ற குழந்தைகளுக்கான கையேடு, மின்சார தீ விபத்துகளிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான புத்தகம் ஆகியவற்றை அவர் வெளியிட்டார். மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யசோநாயக் விடுத்த காணொளிச் செய்தியில் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புச் சோதனைகள் மின்கசிவால் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்க முடியும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய மின்சார ஆணையத் தலைவர் திரு கன்ஷ்யாம் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279382®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2279548)
आगंतुक पटल : 5