சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கல்லீரல், பித்தப்பை அறிவியல் கல்விக் கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில், மத்திய அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 30 JUN 2026 2:42PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள கல்லீரல், பித்தப்பை அறிவியல் கல்விக் கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில், மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா இன்று (30.06.2026) உரையாற்றினார்.

பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரபல கல்வி நிறுவனத்தின் பட்டங்கள் பெறுவது மாணவர்களுக்கு கிடைத்த பேறாகும் என்று அவர் கூறினார். கல்லீரல் வீக்கம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதில் இந்தக் கல்விக் கழகம் சாதனைப் படைத்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மருத்துவத் துறைக்கான உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன் கல்விச் சூழலை சிறப்புடையதாக மாற்றியுள்ளது என்று அவர் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உருவாக்கப்படும் என்று செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பை நினைவுகூர்ந்த திரு நட்டா, ஏற்கனவே, சுமார் 25,000 இடங்கள்  அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார். வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முன்னேற்றம் ஏற்படுவதை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். 30,000 முதுநிலை மருத்துவப் படிப்புகள் என்பது 80,000 ஆக அதிகரித்ததால் நாட்டின் சிறப்பு மருத்துவர்கள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279327&reg=3&lang=1

****

TV/SMB/KPG/SH


(रिलीज़ आईडी: 2279544) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Kannada