நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

அடல் புத்தாக்க இயக்கமும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களும் இணைந்து புத்தாக்கம் குறித்த மாநாட்டை நடத்தியுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUN 2026 12:47PM by PIB Chennai

நித்தி ஆயோகின் அடல் புத்தாக்க இயக்கமும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களும் இணைந்து புத்தாக்கம் குறித்த மாநாடு 2026-ஐ பெங்களூருவில் நடத்தியுள்ளன. இந்த மாநாட்டில் உலகளாவிய திறன் மையத் தலைவர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத்தலைவர்கள், புத்தாக்கத் தலைவர்கள், புத்தொழில் நிறுவன அமைப்பாளர்கள், முயற்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியாவில் புத்தாக்கம், தொழில்முனைவு சூழல் அமைப்பில், ஆழமான ஒத்துழைப்புக்கு பாதைகளைக் கண்டறிவது இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

உலகளாவிய திறன் மையத்தின் முன்னணி நிறுவனங்களான இன்டெல், ஐபிஎம், அமேசான், ஷெல், மெர்சிடிஸ்-பென்ஸ், பிலிப்ஸ், சாம்சங், விப்ரோ, யாஹூ போன்றவற்றின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களின் தலைமை இயக்குநர் திரு அர்விந்த் குமார், அடல் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநர் திரு தீபக் பக்லா உள்ளிட்டோர் உரையாற்றினர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279291&reg=3&lang=1

****

TV/SMB/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2279528) வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Telugu , Kannada