பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியா பயணத்தில் பிராந்திய தொழில்துறை நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும்: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

प्रविष्टि तिथि: 30 JUN 2026 3:41PM by PIB Chennai

‘வளர்ச்சியடைந்த இந்தியா என்பது வெறும் பொருளாதார இலக்கு அல்ல; அது தற்சார்பு, தொழில்நுட்பத் திறன் மிக்க நாட்டை உருவாக்குவதற்கான உறுதிமொழி’ என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். வதோதராவில் நடைபெற்ற துடிப்பான குஜராத் பிராந்திய மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்.

பிராந்திய தொழில்துறை நிறுவனங்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை உலகளாவிய போட்டித் திறன்மிக்கதாக மாற்ற வேண்டும் என்று கூறிய அவர், வளர்ச்சியடைந்த இந்தியா பயணத்தில் பிராந்திய தொழில்துறை நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தற்சார்பு என்பது தனிமைப்படுத்தல் அல்ல; உலக நாடுகளுடன் சம பங்காளியாக நிற்பதாகும் என்று அவர் விளக்கினார்.

மேலும், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி ரூ 1.78 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ 38,424 கோடியை எட்டியுள்ளது. புத்தொழில் நிறுவனங்கள், தனியார் துறையினரின் பங்களிப்பு இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாகும். குஜராத்தின் தொழில்சார்ந்த திறனும் உள்கட்டமைப்புகளும் பாதுகாப்பு உற்பத்தி மையமாக மாறுவதற்கு முழு தகுதியை அம்மாநிலத்திற்கு வழங்குவதாகவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு புபேந்திர படேல், மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279351&reg=3&lang=1

***

SS/PD/SH

 


(रिलीज़ आईडी: 2279503) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati