பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

29-வது தேசிய மின்-ஆளுகை மாநாடு ஜெய்ப்பூரில் நாளை தொடங்குகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUN 2026 3:55PM by PIB Chennai

29-வது தேசிய மின்-ஆளுகை மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நாளை தொடங்குகிறது. மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைந்து இதனை நடத்துகிறது.

"வளர்ச்சியடைந்த இந்தியா 2047: செயற்கை நுண்ணறிவுடன் கூடிய, தரவு சார்ந்த, பாதுகாப்பான டிஜிட்டல் ஆளுகை" என்பது இந்தாண்டு மாநாட்டின் கருப்பொருளாகும். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா தொடங்கி வைக்கிறார்.

மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், 2026-ல் சாதனை படைத்த சிறந்த முயற்சிகளுக்கு தேசிய மின்-ஆளுகை விருதுகளை வழங்குகிறார். இம்மாநாட்டில் பல்வேறு மத்திய, மாநில அரசுத் துறைகள், முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களின் சார்பில் 40-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279362&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2279494) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali