பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி இன்று ஓய்வு பெறுகிறார்

प्रविष्टि तिथि: 30 JUN 2026 12:51PM by PIB Chennai

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி 40 ஆண்டுகால சிறப்புமிக்க சேவைகளுக்கு பின், இன்று ஓய்வு பெற்றார். செயல்பாட்டுத் தயார் நிலை, முப்படைகளுக்கு இடையே இணைப்பை வலுப்படுத்துதல், மாற்றத்தை விரைவுபடுத்துதல், தொழில்நுட்பத்தை உள்வாங்குவதில் கவனம் செலுத்துதல், ராணுவ வீரர்களை மையப்படுத்திய முன்முயற்சிகள் போன்றவற்றால் அவரது பதவிக் காலம் நினைவுகூரப்படும்.

அவரது தலைமையின் கீழ், வடக்குப்பகுதி எல்லைகளின் ஆபரேஷன் பனிச்சிறுத்தை மூலம் இந்திய ராணுவம் வலுவான கண்காணிப்பைப் பராமரித்தது. அவரது பதவிக் காலத்தில் ஆபரேஷன் சிந்தூர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதிகரித்து வரும் பாதுகாப்புச் சூழலில், ராணுவத்தின் தயார் நிலை, துல்லியத்தன்மை,  அளவு ரீதியிலான பதிலடி போன்றவற்றை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது.

ஜெனரல் உபேந்திர துவிவேதி வழிகாட்டுதலின்படி, ராணுவ மறுக்கட்டமைப்பு, நவீனமயம், தொழில்நுட்ப மேம்பாடு, மனிதவள நிர்வாகம், அமைப்புமுறைகளில் சீர்திருத்தம் போன்றவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.

ருத்ரா பிரிகேட், பைரவ் பட்டாலியன், ஆஷ்னி ட்ரோன் பிரிவுகள், சக்தி பான் படைப்பிரிவுகள், திவ்யஸ்த்ர பேட்டரிகள், மின்னணு போர்படைகள், ஒருங்கிணைந்த போர்க்குழுக்கள் போன்றவை அவரது முன்முயற்சிகளில் முக்கியமானவை. நவீன, எதிர்காலத்திற்கு தயாரான படைகளைக் கட்டமைக்கும் மாபெரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இவை விளங்கின.

பணியில் இருக்கும் வீரர்களுக்கும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் மனைவி மற்றும் குடும்பங்களுக்கும் நலப்பணிகள் செய்வதற்கு தமது பதவிக் காலத்தில் அவர் முன்னுரிமை அளித்தார். மூத்த ராணுவ அதிகாரிகளுக்கான சாதனையாளர் விருது போன்ற முன்முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். வளர்ச்சியடைந்த இந்தியா 2047, ஆயுதப்படைகள் தொலைநோக்குப் பார்வை 2047 ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட அவர், உத்திசார் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் 2047 உருவாக்கப்படுவதற்கு வழிகாட்டினார்.

மெச்சத்தக்க பணிகளுக்காக கௌரவமிக்க பரம்விஷிஸ்ட் சேவா பதக்கம், அதிவிஷிஸ்ட் சேவா பதக்கம் ஆகியவை ஜெனரல் உபேந்திர துவிவேதிக்கு வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279293&reg=3&lang=1

***

SS/SMB/KPG/SH


(रिलीज़ आईडी: 2279481) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu