பிரதமர் அலுவலகம்
வானொலி மூலம் ஆற்றிய மனதின் குரல் உரையின் 135-வது பதிப்பிலிருந்து சில பகுதிகளை பிரதமர் பகிர்ந்துகொண்டுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUN 2026 8:36PM by PIB Chennai
அகில இந்திய வானொலி மூலம் ஆற்றிய மனதின் குரல் உரையின் 135-வது பதிப்பிலிருந்து சில பகுதிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பாதுகாப்பான, தற்சார்பு கொண்ட உலகம் தொடர்பான வளர்ச்சியுடன் கூடிய வாய்ப்புக்களுடன் எனது உரை தொடங்கியது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெருமைமிக்க எனது சகோதர சகோதரிகள் பழமையான சிந்தனைகளில் இருந்து விடுபட்டு கருணை உணர்வுடன் பிறருக்கு வழிகாட்டியாக திகழ்கின்றனர்.
நாகாலாந்தின் விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிப்பது தொடர்பான இரண்டு முன்முயற்சிகள்.
பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகமும், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகமும் அதன் பாரம்பரியம் மற்றும் நவீனத்துடன் அழகாக ஒன்றிணைந்துள்ளதை காணமுடியும்.
டொமினிக் குடியரசைச் சேர்ந்த மக்கள் இந்திய கலாச்சாரத்தின் மீது ஆர்வம் கொண்டு பிரம்மகமல் டொமினிக்கானா வேத மந்திரத்தை சொல்லும் அவர்களது முயற்சி பாராட்டத்தக்கது.
மேகாலாயா மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மர வேர்களால் அமைத்துள்ள பாலங்களை பாதுகாத்து வரும் விதம் குறித்து பெருமை கொள்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278663®=3&lang=1
***
SS/SV/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2279385)
வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam