எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இணைப்புத் திட்டத்திற்கு மின்சார நிதிக்கழகம், ஊரக மின்மயக் கழகம் ஆகியவற்றின் இயக்குநர்கள் குழு ஒப்புதல்

प्रविष्टि तिथि: 30 JUN 2026 9:28AM by PIB Chennai

ஊரக மின்மயக் கழகத்தின் பங்குதாரர்கள், கடன்தாரர்கள் ஆகியோரை மின்சார நிதிக்கழகத்துடன் இணைக்க இவற்றின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இணைப்பின் மூலம் மொத்த நிதித்தொகுப்பு ரூ.11 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

இரண்டு நிறுவனங்களின் பங்குதாரர்கள், கடன்தாரர்களின்  ஒப்புதல், ஒழுங்குமுறை மற்றும் அரசு ஆணையங்களின் ஒப்புதல் ஆகியவை பெறப்பட்ட பின் இணைக்கப்பட்ட நிறுவனம் கம்பெனிச் சட்டம் 2023-ன் கீழ் அரசு நிறுவனம் என்ற தகுதியைத் தொடர்ந்து பெற்றிருக்கும்.  இதன் மூலம் மத்திய அரசு பெரும்பான்மை வாக்குரிமையைக் கொண்டிருக்கும்.

முன்மொழியப்பட்ட இணைப்புக்கான பங்கு பரிமாற்றத்தின்படி, ஊரக மின்மயக் கழகத்தின் முழுமையாகச் செலுத்தப்பட்ட தலா 10 ரூபாய் மதிப்புள்ள ஒவ்வொரு 100 சமபங்குகளுக்கும் பதிலாக, மின்சார நிதிக்கழகத்தின் முழுமையாகச் செலுத்தப்பட்ட தலா 10 ரூபாய் மதிப்புள்ள 88 சமபங்குகள் அதன் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279256&reg=3&lang=1

***

SS/SMB/KPG/KR


(रिलीज़ आईडी: 2279329) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati