இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் 'டிஆர்எல் காம்பஸ்' தளத்தை அறிமுகப்படுத்தியது; இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

प्रविष्टि तिथि: 29 JUN 2026 6:15PM by PIB Chennai

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சிலுடன்  இணைந்து, தொழில்நுட்ப தயார்நிலை அளவீடுகளை தரப்படுத்துவதற்காக 'டிஆர்எல் காம்பஸ்' எனும் புதிய தளத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. பேராசிரியர் அஜய் குமார் சூட் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

 

உலகளாவிய ஒன்பது நிலை டிஆர்எல் அளவுகோலை இந்திய ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க சூழலுக்கு ஏற்ப இத்தளம் மாற்றியமைத்துள்ளது. பொது நிதி கோரும் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான பொதுவான தேசிய தரநிலையை இது வழங்குகிறது. குறிப்பாக, 'அனுசந்தான் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை' போன்ற முக்கிய தேசிய முன்முயற்சிகளைச் செயல்படுத்த இது பெரிதும் உதவும்.

 

முன்னதாக, திட்ட மதிப்பீடுகள் தனிப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இருந்தன, ஆனால் இப்போது இத்தளம் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் தரத்தை ஆவணங்களின் அடிப்படையில் புறநிலையாக மதிப்பீடு செய்ய உதவுகிறது. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இத்தளத்தை www.trlcompass.in என்ற இணையதளத்தில் அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279062&reg=3&lang=1

செய்தி அடையான எண்: 2279062

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2279224) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati