அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் தொழில் வர்த்தக சபை தூதுக்குழுவினர் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தனர்

प्रविष्टि तिथि: 29 JUN 2026 4:18PM by PIB Chennai

பிரிக்ஸ் தொழில், வர்த்தக சபை தூதுக்குழுவினர், மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை இன்று (29.06.2026) சந்தித்தனர். புத்தாக்கம், புத்தொழில் நிறுவனங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு, தொழில்முனைவு ஆகியவற்றின் மூலம் பிரிக்ஸ் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் சூழலமைப்பு முழுவதும் தொழில்துறை தலைமையிலான உலகளாவிய ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து இக்குழுவினர் விவாதித்தனர்.

பிரிக்ஸ் தொழில், வர்த்தக சபை தலைவர் திரு சமீப் சாஸ்திரி தலைமையிலான தூதுக்குழுவில், துணைத் தலைவர்கள் திரு அதுல் பன்சால், செல்வி ஷபனா நசீம் மற்றும் தொழில், வர்த்தக சபையின் பிற அலுவலகப் பொறுப்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். பிரிக்ஸ் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் நாடுகளிடையே வர்த்தகத்தை எளிதாக்குதல், வணிகங்களுக்கு இடையிலான ஈடுபாடு, பெண் தொழில்முனைவு, புத்தொழில் நிறுவன வலையமைப்பு, செயற்கை நுண்ணறிவு, ஆராய்ச்சி கூட்டாண்மை, துறைசார் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக கடந்த பத்தாண்டுகளில் வர்த்தக சபை மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அமைச்சரிடம் பிரதிநிதிகள் விளக்கினர்.

உலகளாவிய புத்தாக்க மையமாக இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அதன் தலைமைத்துவமும், தேசிய வளர்ச்சிக்கும் உலகளாவிய மேம்பாட்டிற்கும் பங்களிக்கும் வலுவான சர்வதேச கூட்டாண்மைகளை உருவாக்குவதற்குத் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பிரிக்ஸ் அமைப்பில் செயல்படும் நிறுவனங்கள், வழக்கமான வலையமைப்புத் தளங்களுக்குள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல், அறிவு, புத்தாக்கம் மற்றும் அர்த்தமுள்ள கூட்டாண்மைகள் மூலம் ஒரு தனித்துவமான முன்மொழிவை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

துறை சார்ந்த கூட்டங்கள், புத்தாக்க மன்றங்கள் மற்றும் கருப்பொருள் சார்ந்த ஈடுபாடுகள் மூலம் பரந்த பிரிக்ஸ் சூழலமைப்போடு தனது ஈடுபாட்டை ஆழப்படுத்த வேண்டும் என வர்த்தக சபையை டாக்டர் ஜிதேந்திர சிங் ஊக்குவித்தார். தொடர்ச்சியான வெளிப்படைத்தன்மை, அர்த்தமுள்ள பங்கேற்பு, அறிவு சார்ந்த பங்களிப்புகள் ஆகியவை, விரிவடைந்து வரும் பிரிக்ஸ் சூழலமைப்போடு இந்தியாவின் ஈடுபாட்டை முன்னெடுத்துச் செல்வதில் வர்த்தக சபையின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

பிரிக்ஸ் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் சூழலமைப்பிற்குள் தொழில்முனைவு, புத்தாக்கம், வர்த்தகத்தை எளிதாக்குதல், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு, வணிக வலையமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய முயற்சிகளை பிரிக்ஸ் தொழில், வர்த்தக சபை தூதுக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். பத்தாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த சபை, உறுப்பு நாடுகள் மற்றும் பங்குதாரர் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பங்குதாரர்களை உள்ளடக்கிய சர்வதேச வணிக மன்றங்கள், துறைசார் உரையாடல்கள், கூட்டுத் தளங்கள் ஆகியவற்றின் மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278971&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2279128) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali