சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஜார்க்கண்ட், உத்தராகண்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் தரம், பராமரிப்பு: மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆய்வு
प्रविष्टि तिथि:
29 JUN 2026 5:44PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, ஜார்க்கண்டிலும், உத்தராகண்டிலும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரம், பராமரிப்பு, முன்னேற்றம் குறித்து புதுதில்லியில் இன்று தனித்தனியே ஆய்வு நடத்தினார். ஊடக அறிக்கைகள், சமூக ஊடகத் தளங்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் திரு அஜய் தம்டா, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள், நெடுஞ்சாலைகள் திட்டத்தின் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆய்வின் போது, நீடித்ததாகவும், திறன்மிக்கதாகவும் நெடுஞ்சாலை உளட்கட்டமைப்பை மேம்படுத்த நவீன கட்டுமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி வலியுறுத்தினார். பராமரிப்புப் பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதுடன், மிக உயர்ந்த தரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். தரக் கண்காணிப்பை வலுப்படுத்தவும், தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
வரவிருக்கும் பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளும் வகையில் முறையான வடிகால் மேலாண்மை, சரிவான பகுதிகளில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள், விரைவான மீட்பு வழிமுறைகள் போன்ற விரிவான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279046®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2279112)
आगंतुक पटल : 13