பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டி.ஆர்.டி.ஓ-விற்கு நிதி அதிகாரங்களை ஒப்படைத்தல் 2026: முக்கிய சீர்திருத்தத்தை பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 29 JUN 2026 3:28PM by PIB Chennai

உத்திசார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் செயல்திறன், பொறுப்புக்கூறல் மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துவதை மேம்படுத்த முக்கிய சீர்திருத்தமான, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கான நிதி அதிகாரப் பகிர்வு 2026-ஐ பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2026 ஜூன் 29 அன்று வெளியிட்டார். இந்த நிதி அதிகாரப் பகிர்வு-2026 என்பது  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சூழலமைப்பிலிருந்து உருவாகும் தொழில்நுட்பங்களின் விரைவான உற்பத்திக்கும், பாதுகாப்புப் படைகளில் அவற்றை இணைப்பதற்கும் வழிவகுக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். மேலும், இந்தப் புதிய கட்டமைப்பு, தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தி, தொழில் மற்றும் கல்வித்துறையுடன் வலுவான ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். திருத்தப்பட்ட இந்தக் கட்டமைப்பு, பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் மேம்பட்ட தற்சார்புக்கு பங்களித்து, நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் பல்வேறு மட்டங்களில் செயல்பாட்டு அதிகாரமளிப்பை கணிசமாக மேம்படுத்துவதை நிதி அதிகாரப் பகிர்வு-2026 நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட இந்தக் கட்டமைப்பு, சோதனைகள் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கான தனி நிதி ஒதுக்கீடுகள், திட்டத்திற்கு முந்தைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்னெடுப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அங்கீகாரம், அந்தந்த அட்டவணைகளின் கீழ் வெளி ஆராய்ச்சித் திட்டங்கள், பாதுகாப்பு புத்தாக்க சிறப்பு மையங்கள், தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டங்கள் தொடர்பான மானியங்களுக்கு நிதி அதிகாரங்களைத் தெளிவாகப் பிரித்தல் உள்ளிட்ட பல முக்கியத் தேவைகளைக் கையாள்கிறது.

புது தில்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி; பாதுகாப்புத் துறை  செயலாளர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளர் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் திரு ராஜேஷ் குமார் சிங்; மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278943&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2279101) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Malayalam , Urdu , हिन्दी , Telugu