தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஜோத்பூர் - அகமதாபாத் ரயில் வழித்தடத்தில் செல்பேசி வலையமைப்புத் தரத்தை டிராய் மதிப்பீடு செய்தது.
प्रविष्टि तिथि:
29 JUN 2026 1:34PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), பொது தொலைத்தொடர்பு பயன்பாட்டாளர்களின் தகவலுக்காக, மே 2026-ல் ஜோத்பூர் முதல் அகமதாபாத் வரையிலான ரயில் வழித்தடத்தில் (ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளூர் சேவைப் பகுதி) நடத்தப்பட்ட சுதந்திரமான வாகனச் சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தரும் செல்பேசி வலையமைப்பு சேவைகளின் (குரல், தரவு ஆகிய இரண்டும்) நிகழ்நேரத் தரத்தை மதிப்பிட்டு சரிபார்ப்பது இந்த வாகனச் சோதனையின் நோக்கமாகும். இந்தச் சோதனையின் போது, அழைப்புத் துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற செயல்திறன் போன்ற முக்கிய சேவைகளுக்கான தர அளவுகளில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் செயல்திறனை டிராய் பதிவு செய்கிறது. பின்னர், பயன்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கவும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும் இந்த முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
டிராய், தனது நியமிக்கப்பட்ட முகமை மூலம், 4 மே 2026 அன்று, ஜோத்பூரிலிருந்து அகமதாபாத் வரையிலான ரயில் பாதையில் 456.9 கி.மீ (ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளூர் சேவைப் பகுதி) தூரத்திற்கு வாகனச் சோதனைகளை நடத்தியது. இந்தச் சோதனைகள் டிராய் மண்டல அலுவலகம் ஜெய்ப்பூரின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278892®=3&lang=1
***
SS/SMB/KR
(रिलीज़ आईडी: 2278965)
आगंतुक पटल : 11