பிரதமர் அலுவலகம்
கர்நாடகாவின் மாண்டியாவில் ஸ்ரீ சேத்ர ஆதிச்சுஞ்சனகிரியில் ஸ்ரீ குரு பைரவைக்கியா மடாலயத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
15 APR 2026 2:25PM by PIB Chennai
கர்நாடகாவின் மாண்டியாவில் ஸ்ரீ சேத்ர ஆதிச்சுஞ்சனகிரியில் ஸ்ரீ குரு பைரவைக்கியா மடாலயத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், ஸ்ரீ குரு பைரவைக்கியா கோயிலின் பிரம்மாண்டமான திறப்பு விழாவைக் காணவும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்த துறவிகளுடன் கலந்துரையாடவும் கிடைத்த வாய்ப்பிற்காகத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஜ்வாலா பீடத்தில் நேரத்தை செலவிட்டதும், அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களிடையே உரையாற்றியதும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கான நெகிழ்ச்சியான உணர்வுகளைத் தமக்குள் ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் தெய்வீக அனுபவங்கள் தம் நினைவில் என்றென்றும் நீங்காமல் நிலைத்திருக்கும் என்று பிரதமர் திரு மோடி கூறினார்.
கர்நாடகத்தின் அடையாளமாகத் திகழும் தத்தவஞானம் (தத்துவம்) மற்றும் தந்திரஞானம்' (தொழில்நுட்பம்) ஆகியவற்றின் தனித்துவமிக்க அம்சத்தைக் குறிப்பிட்டார். குறிப்பாக, சர்க்கரை நகரம் என்று அழைக்கப்படும் மாண்டியா மக்களின் வரவேற்பு பண்பு குறித்து அவர் எடுத்துரைத்தார். ஸ்ரீ ஆதிச்சுஞ்சனகிரி மகாசம்ஸ்தான மடாலயம் போன்ற நிறுவனங்கள், இப்பகுதி மக்களுக்கு ஒரு தார்மீக மற்றும் ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்வதாக அவர் குறிப்பிட்டார். கர்நாடகா தத்துவத்தின் ஆழமும் நவீன தொழில்நுட்பத்தின் ஆற்றலும் முறையாக ஒன்றிணையும் ஒரு புண்ணிய பூமியாகும் என்று திரு மோடி தெரிவித்தார்.
இந்தியாவின் உயிரோட்டமிக்க, பல்லாயிரம் ஆண்டுகால நாகரிகம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், 2000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஆதிச்சுஞ்சனகிரி மடாலயத்தின் வரலாற்றில் இடம் பெற்றுள்ள மரபுகளின் அரிதான, தொடர்ச்சியான அம்சங்களை குறிப்பிட்டார். டாக்டர் பாலகங்காதரநாத மகாசுவாமிகள் போன்ற கடந்தகாலப் ஞானிகள் வழங்கிய ஆழமான ஆன்மீக வழிகாட்டுதலை அவர் புகழ்ந்துரைத்தார். மேலும், அந்தப் பாரம்பரியத்தை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்லும் தற்போதைய தலைமைக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். இந்தப் புனிதமான நிறுவனம், தலைமுறை தலைமுறையாகத் தாம் பின்பற்றி வரும் சேவை மரபின் வாயிலாக நமது பூமியை வளப்படுத்தியுள்ளது என்று பிரதமர் திரு மோடி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252169®=3&lang=1
***
SS/IR/RJ/KR
(रिलीज़ आईडी: 2278824)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam